என்னாது கேப்டனா இது…? விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம்… மனம் உருகும் ரசிகர்கள்…!!!

நடிகர் விஜயகாந்தின் அண்மையில் எடுத்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் விஜயகாந்த். இவர் 100 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரின் 100வது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். இப்படத்திற்கு பிறகு இவரை மக்கள் கேப்டன் என்று அழைக்க ஆரம்பித்தனர். இவர் தன்னுடைய பெரும்பாலான திரைப்படங்களில் போலீஸ் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஏழை மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்துடன் இவர் அரசியலில் குதித்தார். 2011-ம் வருடம் நடந்த சட்டசபை தேர்தலில் திமுகவை வீழ்த்தி எதிர்க்கட்சியாக சட்டசபையில் அங்கம் வகித்தது. கடந்த சில வருடங்களாக இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் உள்ளது. அதனால் இவர் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் இவருடைய தற்போதைய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. அப்புகைப்படத்தில் இவர் தோல் சுருங்கி வயதான தோற்றத்தில் காட்சி அளிக்கின்றார். இதைப்பார்த்த ரசிகர்கள் மனது வலிக்கின்றது என உருக்கமாக கமெண்ட்டுகளில் பதிவிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *