என்னது…!கோவிட் தடுப்பூசி கோழி முட்டையிலிருந்தா…. அமெரிக்க விஞ்ஞானிகளின் சூப்பர் சாதனை ..!!!

கொரோனா வைரஸ்-க்கு எதிராக ஒரு புதிய ரக தடுப்பூசி ஒன்றை கோழி முட்டையிலிருந்து அமெரிக்க மருத்துவக் கல்லூரி ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ளனர்.

நியூயார்க் நகரில் உள்ள ஐச்சன் மவுன்ட் சினாய் மருத்துவ கல்லூரியில் சர்வதேச விஞ்ஞானிகள் குழு புதிய ரக கொரோனா தடுப்பூசி ஒன்றை கோழி முட்டையிலிருந்து உருவாக்கியுள்ளது.

இதேபோல் ஃப்ளூ காய்ச்சலுக்கான தடுப்பூசியும் பிரேசில், வியட்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் கோழி முட்டைகளில் இருந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. எம் ஆர்.என்.ஏ ரக தடுப்பூசிகளை தயாரிக்க தேவைப்படும் மிக அதிக குளிர் சூழ்நிலை  இந்த தடுப்பூசி தயாரிப்பதில் தேவைப்படாது என்பதால் உற்பத்தி செலவு மிக மிக குறைவு என்கின்றனர்.

மேலும் இதன் முதல் கட்ட சோதனையில் மிகச்சிறந்த பலனை அளித்துள்ளதால், எதிர்காலத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகள் இந்த தடுப்பூசியை எளிதாகத் தயாரிக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *