என்னது…! என்னுடைய வீட்டில் ரெய்டா…? அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்….!!!

என் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் வீட்டில் தான் சோதனை நடைபெறுகிறது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார். இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்கள் வருமானவரித்துறை சோதனை குறித்து செந்தில் பாலாஜிடம் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதலளித்த அவர், கரூரில் உள்ள வீடு , சென்னையில் உள்ள வீடுகளில் சோதனை நடைபெறவில்லை. எனது சகோதரர் (அசோக்) வீட்டிலும், அவருக்கு தெரிந்தவர்கள் வீடுகளிலும் தான் சோதனை நடைபெறுகிறது என விளக்கம் அளித்தார்.

Leave a Reply