என்னடா இது பாகிஸ்தானா…? டெல்லி காற்று மாசு தொடர்பான வழக்கில்…. ருசிகர சம்பவம்….!!!!

டெல்லியில் காற்று மாசுபாடு தொடர்ந்து மோசமான நிலையை அடைந்து வருகிறது. டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள பிராந்தியங்களில் தேவையற்ற பயிர்களை விவசாயிகள் தீயிட்டு கொளுத்துவதாளும், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகை காரணமாக காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டெல்லி காற்று மாசுபாடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சந்திரசூட், சூா்ய காந்த் ஆகியோர் அடங்கிய அமர்வுக்கு முன் விசாரணைக்கு வந்தது. இதில் காற்று மாசை குறைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் அலட்சியமாக இருக்கக்கூடாது.

காற்று மாசுபாடுக்கு விவசாயிகளின் வேளாண் கழிவுகள் மட்டுமே காரணம் என்று கூறுவது முறையானது அல்ல. வேளாண் பயிர்க்கழிவுகள் எரிப்பைப் பொறுத்தவரை, இரண்டு மாதங்களைத் தவிர அதிகம் இல்லை. விவசாயிகள் வேளாண் கழிவுகளை எரிப்பது 10 சதவிகிதம் தான், வாகனம், தொழிற்சாலை, கட்டுமான பணி, மின்சாரம் போன்றவைதான் மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்கள் என்று தெரிவித்தது.

இந்த நிலையில் இதுதொடர்பான வழக்கில் உத்திரப்பிரதேச அரசு வழக்கறிஞர், மாசுபட்ட காற்று பாகிஸ்தான் தொழிற்சாலைகள் இருந்து வருவதாக கூறியுள்ளார். இதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, அப்படி என்றால் பாகிஸ்தானில் உள்ள தொழிற்சாலைகளுக்கு நாங்கள் தடை போட வேண்டுமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *