கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருள்கள் விற்கப்படுவதை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைக்க காவல்துறையினருக்கு முழு அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று அதிமுக தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்துள்ளார். இதுதொடர்பாக அவரது எக்ஸ்  பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, சென்னை நங்கநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஒரு மாணவனின் நடவடிக்கையில் ஆசிரியர்கள் சந்தேகப்பட்டனர்.

அதனால் அவரது புத்தகப் பையை சோதனையிட்டனர். அதில் கஞ்சா பொட்டலங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின் இதுதொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விரைந்து வந்து அச்சிறுவனிடம் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் கஞ்சா போட்டலங்கள் மக்கள் நடமாடும் இடமாக இருக்கும் ரயில்வே நிலையத்தில் வாங்கியதாக கூறினார். அதோடு இந்த போதைப் பொருட்கள் குறிப்பாக பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் விற்கப்படுவதாகவும், பெட்டிக்கடைகளில் சர்வ சாதாரணமாக மிட்டாய்கள் போல விற்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

இதைப்பற்றி நான் பலமுறை சட்டமன்றத்திலும், பேட்டிகள் வாயிலாகவும் திமுக அரசை எச்சரித்துள்ளேன். நமது அடுத்த தலைமுறையை பாழாக்கும் வகையில் விற்கப்படும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த வேண்டிய காவல்துறையை, எதிர்க்கட்சிணரை மட்டும் பழிவாங்கும் ஏவல்துறையாக திமுக அரசு பயன்படுத்தி வருகிறதுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன்.

எதிர்கால இளம் சந்ததியினரை போதைப்பொருட்கள் பழக்கத்திலிருந்து காப்பாற்றவும், வளமான தமிழகத்தை உருவாக்கவும் இனியாவது போதைப் பொருள்கள் விற்பதை கட்டுப்படுத்த காவல்துறையினுக்கு முழு சுதந்திரம் அளிக்க இந்த அரசை  வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

“>