எங்க தொகுதிக்கு வாங்க…. மோடியை பிரச்சாரத்திற்கு அழைக்கும் திமுகவினர்…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

பிரதமர் மோடியை தங்கள் தொகுதியில் வந்து பிரச்சாரம் செய்யும்படி திமுக வேட்பாளர்கள் பலர் டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். பிரதமர் மோடி கோவை, மதுரை ஆகிய இடங்களில் அதிமுக- பாஜக கூட்டணிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். இந்நிலையில் அவரது அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் எதிர்கட்சிக்குதான் ஆதரவை பெற்றுத் தருவதாக கூறி திமுகவினர் மோடியை தங்கள் தொகுதிக்கு பிரச்சாரம் செய்ய அழைத்து வருகின்றனர்.