“என்கேன்டோ திரைப்படம்”… சிறந்த அனிமேஷன் படத்துக்கான ஆஸ்கர் விருது…!!!

சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான ஆஸ்கர் விருதை “என்கேன்டோ” திரைப்படம் வென்றுள்ளது.

ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று.

தற்போது 94-வது ஆஸ்கர் விழாவானது நடந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருதை ‘என்கேன்டா’ திரைப்படமானது பெற்றுள்ளது. டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸின் 60வது அனிமேஷன் படமான இத்திரைப்படமானது மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. ஹேர்ட் புஷ், பைரான் ஹாவர்ட் இணைந்து இயக்கியிருந்த இப்படமானது சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒரிஜினல் பாடல் உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *