என்ஆர்ஐ வட்டி விகிதங்களை…. திடீரென உயர்த்திய SBI…. இதோ முழு விபரம்…. பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

முதலீட்டாளர்களுக்கு 6.9 சதவீதம் வரை உத்தரவாதமான வருமானத்தினை வழங்கும் SBI, ஊழியர்கள் மற்றும் எஸ்பிஐ ஓய்வூதியதாரர்களுக்கு செலுத்தவேண்டிய வட்டி விகிதத்தை அதிகரித்து இருக்கிறது. மூத்தகுடிமக்கள் அல்லாதவர்கள் செய்யும் எப்டி தொகைக்கு 6.1 சதவீத வருமானத்தை வழங்கும் SBI வங்கி, முதலீடு செய்யக்கூடிய மூத்தகுடிமக்களுக்கு ஒரு வருட வைப்புத் தொகைக்கு 6.6 சதவீத வட்டியை வழங்குகிறது. 5 ஆண்டு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமானது பொதுமக்களுக்கு 6.1 சதவீதம் மற்றும் மூத்தகுடிமக்களுக்கு 6.9 சதவீதம் ஆகும். 2 கோடி ரூபாய் வரையிலான தொகைக்கு 6.1 சதவீதம் வருவாயை SBI வழங்குகிறது.

5 (அ) அதற்கு மேற்பட்ட வருடங்களுக்கு டெபாசிட் செய்தால், 2 கோடி ரூபாய் வரையிலான தொகைகளுக்கு 6.1 சதவீதம் மற்றும் 2 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள தொகைக்கு 5 சதவீதம் என்ற விகிதத்தில் எஸ்பிஐ வட்டிகளை திருத்தியமைத்துள்ளது. நம் நாட்டில் வசிக்கும் மூத்த குடிமகனாக இருந்து SBI பிக்சட் டெபாசிட்டில் ரூபாய்.5 லட்சத்தினை ஓராண்டுக்கு முதலீடு செய்ய விரும்பினால், ஆண்டு வட்டியாக 33,826 கிடைக்கும்.

முதிர்வுத்தொகை 6.6 சதவீதம் என்ற வட்டிவிகிதத்தில் 5,33,826 ரூபாயாக இருக்கும். இத்தொகையை 5 வருடங்களுக்கு முதலீடு செய்தால், முதிர்வுத்தொகை ரூபாய்.5,35,403 ஆக இருக்கும். வெளிநாடுவாழ் இந்தியர்கள் செய்யும் டெபாசிட்களுக்கு SBI 6.1 சதவீத வட்டியைக் கொடுக்கிறது. ஆகவே ஒரு என்ஆர்ஐ ஒரு வருடம் (அ) 5 வருடங்களுக்கு 1 கோடி ரூபாய் முதலீடு செய்தால், வட்டியாக ரூபாய்.6,10,000 என்ற அளவில் வட்டி மட்டும் கிடைக்கும். வட்டியையும் சேர்த்து அவர் பெறும் முதிர்வுத்தொகை 1,06,10,000 இந்திய ரூபாயாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.