சென்னை மாவட்டத்தில் உள்ள பனப்பாக்கம் ரெட்டி தெருவில் சரோஜம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இரவு நேரத்தில் மூதாட்டி காற்றுக்காக கதவை திறந்து வைத்துக்கொண்டு தூங்கி உள்ளார். அப்போது வீட்டிற்குள் நுழைந்த திருடன் பீரோவை திறந்து நகை, பணம் இருக்கிறதா என தேடியுள்ளான். ஆனால் விலை உயர்ந்த பொருட்கள் எதுவும் அங்கே இல்லை. இதற்கிடையே பொருட்கள் உருளும் சத்தம் கேட்டு எழுந்த மூதாட்டி திருடன் நிற்பதை கண்டு அலறி சத்தம் போட்டார். இதனால் கோபமடைந்த திருடன் கத்தியை காட்டி சத்தம் போடக்கூடாது என மிரட்டி உள்ளான்.

இதனையடுத்து நகை, பணம் எதுவும் என்னிடம் இல்லை என மூதாட்டி தெரிவித்துள்ளார். இதனால் கோபமடைந்த திருடன் எனது நேரத்தை வீணடித்து விட்டாய் என கூறி மூதாட்டியின் முகத்தில் குத்தியுள்ளான். இதனால் நிலைகுலைந்து மூதாட்டி வலியில் அலறி துடித்தார். மேலும் மூதாட்டியின் விரலில் அணிந்திருந்த மோதிரத்தை திருடன் கழற்ற முயன்றார். அதுவும் வராததால் கோபத்தில் மூதாட்டியை சரமாரியாக அடித்து உதைத்து விட்டு திருடன் அங்கிருந்து தப்பி சென்றான். பின்னர் காயமடைந்த மூதாட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் திருடனை தீவிரமாக தேடி வருகின்றனர்.