“எனக்கு 80 வயசு ஆகிட்டு”…. இனி தேர்தலில் போட்டியிட முடியாது… எடியூரப்பா அதிரடி அறிவிப்பு….!!!

கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் பாஜக நாடாளுமன்ற குழு உறுப்பினருமான பிஏஎஸ் எடியூரப்பா ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது எடியூரப்பா இனி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்துள்ளார். அதன் பிறகு அரசியலில் இனி தீவிரமாக ஈடுபட போவதாகவும், 2024 ஆம் ஆண்டு கர்நாடகாவில் மீண்டும் பாஜக ஆட்சியை கைப்பற்றவும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியை தொடரவும் கடுமையாக உழைப்பேன் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது தனக்கு 80 வயது ஆவதால் இனி தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.