எனக்கு வேறென்ன வேணும்…. “மை டியர் ஷாருக், என்னோட அண்ணன் தளபதி”…. அட்லீ வெளியிட்ட புகைப்படம்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் இயக்குனர் அட்லி. இவரின் இயக்கத்தில் முதன் முதலாக வெளியான ராஜா ராணி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி,மெர்சல் மற்றும் பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார். தற்போது ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து ஜவான் திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.

இந்நிலையில் இயக்குனர் அட்லி நேற்று தனது 36 ஆவது பிறந்த நாளை கொண்டாடினார்.அவருக்கு திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்த நிலையில் நடிகர் சாருக் கான் மற்றும் நடிகர் விஜய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை அட்லி வெளியிட்டுள்ளார். அதில் அவர், இதைவிட என் பிறந்தநாளுக்கு என்ன கேட்க முடியும், எனது தூண்களுடன் கொண்டாடிய சிறந்த பிறந்தநாள் இது. மை டியர் ஷாருக் மற்றும் என்னோட அண்ணன் தளபதி விஜய் எனக் கூறி புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *