“எனக்கு வரதட்சனையே வேண்டாம்” என கூறிய மாப்பிள்ளைக்கு… பெண் வீட்டார் கொடுத்த ஷாக்…!!!

மேற்கு வங்கத்தில் வரதட்சணை வேண்டாம் என்று கூறிய மாப்பிள்ளைக்கு பெண் வீட்டார் சார்பில் வழங்கப்பட்ட பரிசு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்தியாவில் காலம் காலமாக வரதட்சனை வழங்கும் வழக்கம் இருந்து கொண்டு வருகின்றது. மணமகள் வீட்டார் மணமகன் வீட்டாருக்குத் திருமணத்திற்காக பணம், நகை என்று வரதட்சணை கொடுப்பார்கள். ஆனால் தற்போது வரதட்சனை உச்சத்திற்கு சென்று வரதட்சணை தரவில்லை என்றால் மணப்பெண்ணை மணமகன் வீட்டார் அடித்து கொடுமை செய்யும் சம்பவங்கள் எல்லாம் நடந்து கொண்டு வருகின்றது. இதனால் இளைஞர்கள் மத்தியில் வரதட்சனை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பல இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்து கொள்கின்றனர்.

சமீபத்தில் மேற்கு வங்காளத்தில் நடந்த சம்பவம் தலைகீழாக இருந்தது. மேற்கு வங்கம் மிட்னாபூர் என்ற பகுதியை சேர்ந்த சூரியகாந்தக் என்பவர் அதே பகுதியை சேர்ந்த பிரியங்கா என்பவரை திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன்பு பெண் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று கூறி இருந்தார். ஆனாலும் தன் மகளுக்கு ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணிய மணப்பெண் வீட்டார் வரதட்சணைக்கு பதிலாக ஆயிரக்கணக்கான புத்தகங்களை வாங்கி மணமகனுக்கு பரிசாக வழங்கியுள்ளனர்.

இதைப் பார்த்த மணமகன் ஷாக் ஆகி விட்டார். ராபிந்திரநாத் தாகூர், பக்கீம் சந்தர் சட்டர்ஜி எழுதி புத்தகங்கள், ஹாரி பாட்டர் நாவல்கள், என பல பிரபலமான புத்தகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. இந்த புத்தகங்களை ஸ்பெஷலாக ஆர்டர் செய்து திருமணத்தன்று பரிசாக கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *