தமிழில் இயக்குனர் பாண்டியராஜ் இயக்கிய “பசங்க” என்ற திரைப்படம் மூலம் விமல் பிரபலமானார். தொடர்ந்து வாகை சூடவா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்குராஜா, புலிவால், ஜன்னல் ஓரம், கலகலப்பு, மஞ்சப்பை உள்ளிட்ட பல்வேறு படங்களில் விமல் நடிகராக நடித்துள்ளார். இந்நிலையில் இணையதளங்களில் நடிகர் விமல் மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் பரவி திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதனால் பலரும் விமலை தொடர்பு கொண்ட நலம் விசாரித்தனர். இது குறித்து விமல் கூறும் போது, எனக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான தகவல் உண்மை இல்லை. யாரோ தவறான தகவலை பரப்பி உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு எனக்கு லேசான இருமல் ஏற்பட்டதால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றேன். இப்போது நான் நலமாக இருக்கிறேன் என கூறியுள்ளார்.