குஜராத் மாநிலத்தில் முகேஷ் பர்மர் (40) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆட்டோ ஓட்டுனராக இருக்கிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இதில் முகேஷ் பர்மருக்கு கடந்த சில தினங்களாக உடல்நலம் சரியில்லாததால் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்தார். இந்நிலையில் சம்பவநாளில் முகேஷ் வீட்டிலிருந்தார். அவருடைய இளைய மகள் ஹெடாலியும் (18) உடன் இருந்தார்.
அப்போது தன் தந்தைக்கு சமைத்துக் கொடுக்கும்படி மகளிடம் கூறிவிட்டு தாய் வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில் ஹெடாலி சமையல் செய்யாமல் வீட்டில் உள்ள பிற வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார். இதனால் தந்தை மகளுக்கு இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தந்தை தன் மகளை வீட்டிலிருந்த குக்கரை எடுத்து தலை மற்றும் முகத்தில் பலமாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த மகள் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முகேஷை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.