எனக்கு தமிழ் மீதான அன்பு…. என்றுமே குறையாது – பிரதமர் மோடி புகழாரம்…!!!

ஞாயிறுதோறும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றுவது வழக்கம். இந்நிலையில் இன்றைய மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கு பெறும் ஒவ்வொரு வீரர்களும் தங்களுடைய வாழ்க்கையில் கடுமையான போராட்டங்களை சந்தித்தவர்கள்.

அவர்கள் நீண்டகாலம் கடுமையாக உழைத்து உள்ளனர். அவர்கள் தங்களுக்காக மட்டும் விளையாட செல்லவில்லை, நாட்டுக்காக செல்கின்றனர் என்று தெரிவித்துள்ளார். மேலும் உலகிலேயே மிகவும் தொன்மையான மொழி இந்தியாவில் உள்ளது என்பது நம் அனைவருக்கும் பெருமை. தமிழ் மொழி மீதான என் அன்பு என்றுமே குறையாது. தமிழ் மொழி குறித்து எனக்கு மிகவும் பெருமிதமாக உள்ளது என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *