“எனக்கு கல்யாணம் பண்ணிவைங்க” கேட்ட 2 அடி இளைஞன்…. “நான் ரெடி” குவிந்த பெண்கள் கூட்டம்…!!

திருமணம் செய்து வைக்கக்கோரி காவல் நிலையத்தில் புகார் அளித்த 3 அடி இளைஞனை மணக்க  பல பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்

உத்தர பிரதேசத்தை சேர்ந்த அஸீம் மன்சூரி  என்ற 2 அடி 3 இன்ச் உயரம் கொண்ட இளைஞர் சில வாரங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் கோரிக்கை ஒன்றை  வைத்தார். அதில் தனக்கு திருமண வயது கடந்து விட்டதாகவும் ஆனால் இதுவரை தனக்கு எந்த பெண்ணும் கிடைக்கவில்லை என்றும் தாங்கள் தான் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த கோரிக்கையை கேட்ட காவல்துறையினருக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியவில்லை.

இவரது இந்த கோரிக்கை குறித்த தகவல் சமூக வலைத்தளத்திலும் வைரலானது. இந்நிலையில் இளைஞர் அஸீமை திருமணம் செய்து கொள்ள இரண்டு பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒருவர் அஸீம் உயரத்தில் இருக்கும் ரிஹானா என்ற 25 வயது உடைய பெண். தான் அஸீமை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் இது தனக்கு சந்தோசத்தை கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.

அதன் பிறகு சிறிது நாட்கள் கழித்து டெல்லியை சேர்ந்த பெண் ஒருவரும் காணொளி ஒன்றில் அஸீமை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அஸீம் மன்சூரி கூறுகையில் “இது கடவுள் என் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்துகிறது. எனக்கான துணையும் உலகில் இருக்கிறது என்பதை இது உணர்த்துகிறது” என கூறியுள்ளார். அஸீம் புகார் அளித்தது வைரலானதை தொடர்ந்து ஏராளமான பெண்கள் அவரை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது உறவினர் ஆஸிப் என்பவர் கூறியுள்ளார்.