கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கிச்சா சுதீப். இவர் நான் ஈ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதன் பிறகு நடிகர் விஜய்க்கு வில்லனாக புலி என்ற திரைப்படத்திலும் நடித்தார். இவர் தற்போது கப்ஜா என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில், அப்படம் 7 மொழிகளில் மார்ச் மாதம் 17-ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் விரைவில் சட்டசபை வர இருப்பதால் நடிகர் கிச்சாசுதீப் அரசியலில் ஈடுபட போகிறார் என்று ஒரு தகவல் தீயாக பரவியது. இதற்கு நடிகர் கிச்சா சுதீப் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறியதாவது, எனக்கு அனைத்து அரசியல் தலைவர்களுடனும் தொடர்பு இருக்கிறது. ஆனால் அரசியலுக்கு வருவது பற்றி நான் எந்த முடிவும் எடுக்கவில்லை. நான் அரசியலுக்கு வரும்போது அதை பற்றி நானே முறையாக அறிவிப்பேன். அதற்கு முன்பாக நான் அரசியலுக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகிறார்களா என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அரசியல் இல்லாமல் சேவை செய்ய முடியும் என்கிற போது நான் ஏன் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை ரசிகர்கள் யோசித்துப் பார்க்க வேண்டும் என்று கூறினார்.