“எனக்கு அந்த நடிகை பிடிக்காது”….. ஓபனாக பேசிய காந்தாரா பட ஹீரோ ரிஷப் ஷெட்டி….!!!!

காந்தாரா திரைப்படத்தின் வாயிலாக மிகவும் பிரபலமாகி இருக்கிறார்  ரிஷப் ஷெட்டி. இவர் இயக்கி நடித்த இந்த படம் வெறும் 15 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும், இப்போது ரூ.400 கோடிக்கும் மேலாக வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. அத்துடன் இப்படம் ஓடிடியில் வெளியாக இருக்கும் நிலையில், நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் அண்மையில் ஒரு தெலுங்கு இணையதளத்துக்கு ரிஷப் ஷெட்டி அளித்திருக்கும் பேட்டியில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது,” ராஷ்மிகா மந்தனா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், சாய் பல்லவி ஆகிய நடிகைகளில் யாருடன் நடிக்க விரும்புகிறீர்கள்?” என கேட்கப்பட்டது. அதற்கு ரிஷப் ஷெட்டி பதில் கூறியதாவது “நான் ஸ்கிரிப்ட் முடிவான பிறகுதான் நடிகர்களை தேர்வு செய்வேன். மேலும் நான் புது முகங்கள் உடன் பணியாற்ற தான் விரும்புவேன். ஏனெனில்  அவர்களுக்கு தான் எந்த பிரச்னையும் இருக்காது. இந்த நடிகைகளை தனக்கு பிடிக்கவில்லை.

எனினும் சாய் பல்லவி, சமந்தா போன்றோரின் நடிப்பு எனக்கு பிடிக்கும்” என கூறியிருக்கிறார். இதற்கிடையில் ராஷ்மிகா மந்தனாவை அறிமுகப்படுத்திய இயக்குனர் ரிஷப் ஷெட்டி தான் என்பது கவனிக்கத்தக்கது. ஆனால் தற்போதைய பேட்டியில் அவரை பிடிக்காது என ஓப்பனாக கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் ராஷ்மிகா பேட்டி அளித்தபோது, தன் முதல் திரைப்படம் குறித்து பேசிய விஷயம்தான் ரிஷப் ஷெட்டிக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply