அமெரிக்க நாட்டிற்கு செல்ல விசா கேட்டு விண்ணப்பிக்கும் இந்தியர்கள் நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இந்த நடைமுறையை மாற்றிட வேண்டும் என அமெரிக்க அதிபர் பைடனுக்கு அந்நாட்டு வெளியுறவுதுறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

குறிப்பாக விசா வழங்குவதற்காக வீடியோ நேர்காணல் நடத்த அனுமதி அளிப்பது, அதிக கவுண்டர்களை திறப்பது, பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசம், நேபாளம் போன்ற நாடுகளில் இருந்து விசா கேட்பவர்களுக்கு 400 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் காத்திருக்கும் காத்திருக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இதனை இரண்டு முதல் நான்கு வாரங்களாக குறைக்க வேண்டும்.

மேலும் இந்தியாவில் இருந்து முதல் முறையாக விசா கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு குறிப்பாக பி1, பி2(சுற்றுலா, வணிகம்) விசா வகைகளில் உள்ளவர்களை நீண்ட காலம் காத்திருக்க வைக்காமல் உடனே விசா வழங்க வேண்டும் என அந்நாட்டு வெளியுறவுதுறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.