எந்தெந்த மாவட்டத்திற்கு இ-பாஸ் கட்டாயம் – கட்டாயமில்லை…. அரசு அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.  இந்நிலையில் வருகிற 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடியவுள்ள நிலையில், முதல்வர் இன்று ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். அதன்படி தொற்று குறையாத கோவை, நீலகி,ரி திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு திருமணத்திற்கு இ-பாஸ் பெற வேண்டும். மற்ற மாவட்டங்களில் திருமணம் சார்ந்த போக்குவரத்திற்கு இ-பாஸ் இல்லாமல் பயணிக்கலாம். நீலகிரி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி, குற்றாலம் ஆகிய இடங்களுக்கு பயணிக்க இ-பாஸ் தேவை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *