விலங்குகளின் வீடியோக்களுக்கு என்று சமூகவலைத்தளத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. சமூகஊடக உலகில் தினசரி விலங்குகளின் வெவ்வேறு வீடியோக்கள் பகிரப்படுகிறது. அண்மை காலங்களில் காட்டு விலங்குகளின் வீடியோக்கள் பட்டையை கிளப்பி வருகிறது. அந்த அடிப்படையில் தற்போது வெளிவந்துள்ள வீடியோ ஒரு ஆபத்தான நீர்யானை தொடர்பானது ஆகும்.

அந்த வைரல் வீடியோவில் நீர் யானைகள் வசிக்கும் பகுதிக்கு பயணிகள் சிலர் படகு வாயிலாக சென்று உள்ளனர். அப்போது அங்கிருந்த நீர் யானைகளில் ஒன்று திடீரென அந்த பயணிகளை நோக்கி ஆக்ரோஷமாக வந்தது. இதன் காரணமாக திகிலடைந்த அந்த பயணிகள் படகை வேகமாக ஓட்டி அங்கிருந்து தப்பித்தனர். தற்போது இந்த வீடியோவானது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.