எதிர்ப்பை மீறிய தைவான்…. அடுக்கடுக்கான தடைவிதித்த சீனா…. வெளியான தகவல்….!!!!

2ஆம் உலகப்போருக்கு பின் சீனாவிடமிருந்து பிரிந்துசென்ற தைவான், தன்னை ஒரு சுதந்திர நாடாக கூறிவருகிறது. எனினும் சீனாவானது, தைவான் தங்களது நாட்டின் ஒருபகுதி எனகூறி சொந்தம் கொண்டாடுகிறது. இந்நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சிபெலோசி தைவானுக்கு போக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது. இதனால் கடுமையாக எதிர்த்த சீனாவானது, நான்சிபெலோசி தைவான் சென்றால் அமெரிக்கநாடு அதற்குரிய விலையை கொடுக்க வேண்டி இருக்கும் என்று எச்சரித்தது. இருந்தாலும் சீனாவின் எதிர்ப்பு மற்றும் மிரட்டலை மீறி நான்சிபெலோசி தைவான் சென்றார். இவ்வாறு கடும் பதற்றத்திற்கு இடையில் நான்சிபெலோசியின் விமானமானது தைவான் தலை நகர் தைபேயில் தரை இறங்கியது.

இதையடுத்து நான்சிபெலோசி, தைவான் அதிபரான சாய்இங் வென், உயர் மட்ட அரசு அதிகாரிகளை சந்தித்துள்ளார். அதன்பின் நான்சிபெலோசி பத்திரிகையாளர்களிடம் பேசியதாவது “தைவானுக்கு அமெரிக்காவின் ஆதரவு இருக்கிறது. இதில் தைவான் நாட்டுக்கு பாதகம்வரும் வகையில் எதுவும் நடப்பதற்கு நாங்கள் விட மாட்டோம். இதற்கிடையில் தைவானிலும் உலகெங்கிலும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாடு இரும்புக் கரம் நிறைந்ததாகவே இருக்கிறது” என அவர் கூறினார். இந்நிலையில் நான்சிபெலோசியின் வருகை காரணமாக கோபத்திலுள்ள சீனாவானது, இவ்விவகாரத்தில் தைவான் மீது கடுமையான பொருளாதார தடைகளை அறிவித்துள்ளது.

அந்த வகையில் தைவான்நாட்டின் சுதந்திரத்தினை ஆதரிக்கும் 100க்கும் அதிகமான நிறுவனங்களின் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. தடை விதிக்கப்பட்ட நிறுவனங்களில் பெரும்பாலானவை உணவு தயாரிப்பு நிறுவனங்கள் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி தைவானின் தேயிலை இலைகள், உலர் பழங்கள், தேன், கொக்கோ பீன்ஸ், காய்கறிகள் மற்றும் மீன் வகைகள் போன்றவற்றின் இறக்குமதிக்கு சீனா தடை விதித்துள்ளது. அதேபோன்று சீனாவிலிருந்து, தைவான் நாட்டிற்கு இயற்கைமணல் ஏற்றுமதி செய்வதை நிறுத்தபோவதாகவும் அறிவித்திருக்கிறது. தைவான் நாட்டின்மீது சீனாவானது கடுமையான அணுகுமுறையை கொண்டிருக்கிறது. ஆகவே இத்தடைகளால் தைவான் நாடானது  பொருளாதாரரீதியில் பாதிப்டையும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.