எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீசாரின் பேச்சுவார்த்தை….!!

காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு காவல்நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள திமிரிகோட்டை பகுதியில் மோகனப்பிரியா(19) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த 6 மாதங்களாக மோகனப்பிரியாவும் திண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த கோகுல்(22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இவர்களின் காதலுக்கு மோகனபிரியாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் மோகனப்பிரியாவிற்கு வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் காதலர்கள் வீட்டை விட்டு வெளியேறி நாமக்கல்லில் இருக்கும் முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு பாதுகாப்பு கேட்டு காதல் ஜோடி ஓமலூர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இருவீட்டு பெற்றோரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோகுலின் பெற்றோருடன் அவர்களை அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *