தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் மகளிர் உரிமைத்தொகை திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாதமும் தகுதி உள்ள பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எதிர்காலத்தில் ஆண்களுக்கும் உரிமை தொகை வழங்கப்படும் என்று கூட்டுறவு துறை அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார். காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் உரையாற்றிய அவர், மாணவிகளுக்கு மட்டும் உதவி தொகை வழங்கப்படுகிறது என்ற மாணவர்களின் இயக்கம் தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதனைப் போலவே ஆண்களுக்கு உரிமை தொகை தரவில்லையே என்ற ஒரு ஏக்கம் உள்ளது. அந்த ஏக்கத்தையும் எதிர்காலத்தில் தீர்த்து வைக்கும் சூழல் வரும் என அவர் தெரிவித்துள்ளார்.