“எதற்கும் துணிந்தவன்”…. சூர்யாவின் வேற லெவல் ‘ஹீரோயிசம்’…. வெளியான மாஸ் அப்டேட்….!!!!

நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான “சூரரை போற்று” திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. அதனை தொடர்ந்து சூர்யா “எதற்கும் துணிந்தவன்” என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். மேலும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சூர்யாவிற்கு ஜோடியாக ப்ரியங்கா அருள்மோகன் நடித்திருக்கிறார்.

அதோடு மட்டுமில்லாமல் இந்த படத்தில் நடிகை திவ்யா, வினய், நடிகர் சத்யராஜ், இளவரசு, சரண்யா, பொன்வண்ணன், தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சமீப காலங்களாக சூர்யா கிளாசிக்கான படங்களில் நடித்து வருகிறார். எனவே சூர்யாவுக்கு “எதற்கும் துணிந்தவன்” படம் மாஸான படமாக அமையும் என்று இயக்குனர் பாண்டியராஜன் அண்மையில் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.

அதோடு மட்டுமல்லாமல் “எதற்கும் துணிந்தவன்” படம் உலகம் முழுவதும் பிப்ரவரி 4-ஆம் தேதியன்று ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீஸ்-ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா அதிகரித்து வந்தால் திரையரங்குகளில் கட்டுப்பாடு காரணமாக இந்த படம் தள்ளி வைக்கப்படலாம் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ரசிகர்கள் இந்த படத்தை திரையரங்குகளில் காண ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *