“எதற்கும் துணிந்தவன்”…. ‘எதிர்பார்த்த அளவுக்கு இல்லை’…. ஒருவேளை அதுதான் காரணமோ?….!!!

நடிகர் சூர்யாவின் ”எதற்கும் துணிந்தவன்” திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. 

தமிழ் திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சத்யராஜ், சூரி மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படம் பல சர்ச்சைகளை தாண்டி  இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

இருப்பினும் சூர்யாவின் படங்களுக்கு முந்தைய இருந்த அளவிற்கு இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் சூர்யாவின் கடந்த சூரரை போற்று மற்றும் ஜெய் பீம் படங்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றாலும் அவை OTT யில் மட்டுமே வெளிவந்தன.

இதில் ஜெய் பீம் திரைப்படம் குறித்து பல சர்ச்சைகள் எழுந்தது. இதுனாலயே இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு மிகவும் தாமதமாகத்தான் வெளியிடப்பட்டது. இதன் காரணமாக தான் எதற்கும் துணிந்தவன் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு ஆகவில்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர் . ஆனாலும் சூர்யாவின் ரசிகர்கள் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படத்தை திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *