தமிழ்நாடு பிராமணர் சங்கமான தாம்ப்ராஸ் கோவை மாவட்ட மாநாடு நேற்று (ஜன,.8) கோவை இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடைபெற்றது. எப்போதும் சமூகத்திற்காக செயலாற்றிக் கொண்டு இருப்பது தான் பிராமண சமூகம் ஆகும். மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் 2ஆம் நாளான நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், முக்கியமான பிரமுகர்கள் பங்கேற்று பல்வேறு மையக் கருத்துகளில் பேசினர்.

இந்த மாநாட்டில் ஊடகவியலாளர் ரங்கராஜ் பாண்டே கலந்துகொண்டு பேசியதாவது “இன்று பிராமணர் என்று சொல்லவே பலர் தயங்குகின்றனர். அந்த அளவு உளவியல் ரீதியான தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தி விட்டனர். பிராமணர் போன்ற வைராக்கியம் எந்த சமூகத்துக்கும் இருப்பதில்லை என்று அவர் பேசினார். எதற்காகவும் சனாதன தர்மத்தை விட்டுக்கொடுக்காதீர்கள் என்றும் அவர் கூறினார்.