எண்ணெய் மில்லில் பயங்கர தீ விபத்து…. 2 மணி நேரம் போராட்டம்…. தீயணைப்பு வீரர்களின் முயற்சி…!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள முத்துலிங்கபுரத்தில் தனியாருக்கு சொந்தமான எண்ணெய் மில் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதுகுறித்து உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை அதிகாரி குருசாமி மற்றும் அந்தோணி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு எண்ணெய் மில்லில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.