எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க….. 1000 கருவிகள்….. நிதி ஒதுக்கிய தமிழக அரசு….!!!!

எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளை கண்காணிக்க ஆயிரம் எண்ணிக்கையில் மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. இதற்கு தேவையான நிதியை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை வெளியிட்டுள்ள உத்தரவில் எடை குறைவாகப் பிறகும் குழந்தைகளை கண்காணிக்க 85 லட்சம் செலவில் ஆயிரம் எண்ணிக்கையிலான மின்னணு தொழில்நுட்ப வளர்ச்சி கண்காணிப்பு கருவிகள் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதனால் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட இயக்குனர் அரசுக்கு கடிதம் எழுதி இருந்தார். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் மின்னணு தொழில்நுட்ப கருவியை சென்னை ஐஐடி வடிவமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கருவி ஒன்றினை 1500 என்ற விலையில் கொள்முதல் செய்யலாம் எனவும், ஆயிரம் கருவிகளை 85 லட்சத்துக்கு வாங்கவும் அரசு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. மேலும் இதற்கான செலவினத்தை மத்திய அரசின் நிதி திட்டத்தின் கீழ் 80 சதவீதமும், மாநில அரசின் நிதியாக 20 சதவீதமும் அளிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *