“எச்சரிக்கை செய்தி!”…. கனடா செல்ல ஆசைப்பட்டு…. வாழ்க்கையை தொலைத்த இந்திய பெண்….!!!!

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஜண்ட் என்ற கிராமத்தில் ஹர்மன் சிங் என்ற பணக்கார இளைஞர் வசித்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான இளம்பெண் ஒருவருக்கு வெளிநாட்டில் குடியேற வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. இதற்கிடையே ஹர்மன் சிங் அந்த இளம்பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளார்.

மேலும் ஹர்மன் சிங் அந்த இளம்பெண்ணிடம் தனது சகோதரிகள் இருவரும் கனடாவில் வசித்து வருவதாகவும், நாம் இருவரும் திருமணம் செய்து கொண்டால் கனடாவில் சென்று குடியேறலாம் என்று ஆசை வார்த்தைகளை கூறியுள்ளார். அதனை நம்பிய அந்த இளம்பெண்ணும் பணக்கார இளைஞரான ஹர்மனுடன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஹர்மனிடம் கேட்டுள்ளார். பின்னர் ஹர்மன் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அப்போது தான் அந்த இளம்பெண் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்துள்ளார். பிறகு இந்த சம்பவம் குறித்து அந்த இளம்பெண் தனது கணவரிடம் கூறியுள்ளார். ஆனால் கனடாவுக்கு செல்ல வேண்டும் என்று கனவு கண்ட அந்த பெண்ணுடைய வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *