எச்ஐவி பாதிக்கப்பட்ட பெண்… உதவித்தொகை வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு…!!!

விருதுநகரில் எச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சத்து உணவுக்காக உதவித்தொகை வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கவனக்குறைவால் ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்டு பெண்ணொருவர் பாதிக்கப்பட்டார். அதனால் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணிற்கு சத்து உணவுக்காக மாதம் 7500 ரூபாய் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ வசதிகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்தும், பெண்ணிற்கு அரசு இளநிலை உதவியாளர் பணி வழங்குவது குறித்தும் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.