எங்க நின்னாலும் அவுட் தான்…! ராஜேந்திர பாலாஜிக்கு தோல்வி.. அதிமுக எம்.எல்.ஏ போர்க்‍கொடி …!!

வரும் சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்டத்தில் அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜி எந்தத் தொகுதியில் நின்றாலும் தோற்பது நிச்சயம் என சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜவர்மன் பரபரப்பு பேச்சால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் திரு.ராஜேந்திர பாலாஜிக்கும் , சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜவர்மனுக்கும் இடையே நீண்ட காலமாக பனிப்போர் நிலவி வந்துள்ளது. இந்நிலையில் சாத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கூட்டத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் திரு.ராஜவர்மன் அமைச்சர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் இது குறித்து  ஆடியோ ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும்  தெரிவித்தார்.

2016 சட்டமன்றத் தேர்தலின்போது விருதுநகர் மாவட்டத்தில் நான்கு தொகுதிகளில் அதிமுக தோற்கடிக்கப்பட்டது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியே காரணம் எனவும் இது குறித்து தலைமை கழகத்திடம் புகார் அளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் வரும் சட்டமன்ற தேர்தலில் விருதுநகர் மாவட்த்தில் திரு.ராஜேந்திர பாலாஜிக்கு எந்த தொகுதியில் அவர் போட்டியிட்டாலும் தோற்ப்பது நிச்சியம் என திரு ராஜவர்மன் கூறியது  அதிமுகாவில் உட்கட்சி மோதல் தீவிரமாக வருவதை வெட்ட வெளிச்சமாகியுள்ளது.