எங்க அம்மாவையே நீ அடிக்கிறியா… சுத்தியலால் அடித்துக் கொன்ற மகன்… துடிதுடித்து உயிரிழந்த தந்தை…!!!

தந்தை குடித்து விட்டு வந்து தாயை தாக்கியதால் மகன் தந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை புறநகர் தகிசர் கிழக்கு சித்திவினாயக் நகரின் குடிசை பகுதியை சேர்ந்தவர் அன்னாராவ் என்பவரின் மனைவி ஜெயமாலா. இவர்களுக்கு அமோல் பன்சோடே மற்றும் சந்தீப் பன்சோடே என்ற 2 மகன்கள் உள்ளனர். மூத்தமகன் கொரியர் டெலிவரி பாயாக வேலை பார்த்து வருகிறார், இளையமகன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். அன்னாராவ் அடிக்கடி குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்வார். சம்பவம் நடந்த தினம் இரவு 7 மணி அளவில் குடித்து விட்டு வந்த அன்னாராவ் கேஸ் அடுப்பை பற்ற வைத்து பின்னர் சுத்தியலால் மொசைக் தரையை அடித்து உடைத்தார். இதை தடுக்க முயன்ற மனைவியை தாக்கியுள்ளார். உடனே ஜெயமாலா இளைய மகன் சந்தீப்புக்கு கால் செய்து தகவல் தெரிவித்துள்ளார்.

வீட்டுக்கு விரைந்து வந்த சந்தீப் தாயை அடிக்காமல் தந்தையை தடுத்துள்ளார். இதனை தொடர்ந்து தந்தைக்கும் மகனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சந்தீப் கோபத்தில் தந்தையை கத்தியால் குத்தி சுத்தியலால் அடித்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சந்திப்பை கைது செய்தனர். பின்னர் அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *