கேரள மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு மாவட்டத்தில் சினேகா அஞ்சலி என்பவர் வசித்து வந்தார். இவர் வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் சினேகாவை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்கவில்லை. இதனால் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சினேகாவை தேடி வந்தனர்.
இந்த நிலையில் முத்தாண்டி ஆற்றங்கரையில் ஒரு பெண்ணின் குடை மற்றும் செருப்பு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியோடு ஆற்றில் இருந்த ஒரு பெண்ணின் சடலத்தை மீட்டனர். அப்போதுதான் அது சினேகா அஞ்சலி என்பது தெரியவந்தது. அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.