எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்…. ஆட்டோ ஓட்டுநர்களின் போராட்டம்…. வேலூரில் பரபரப்பு….!!!!

ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பழைய பேருந்து நிலையம்  அருகே  அமைந்துள்ள திருவள்ளுவர் சிலை அருகே  ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வந்தனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி போக்குவரத்து காவல்துறையினர் ஆட்டோக்களை உடனடியாக அகற்ற வேண்டும் என எச்சரித்துள்ளனர். இதனை கேட்டு ஆத்திரமடைந்த 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் முன்பு திருவள்ளுவர் சிலை அருகே திரும்பவும் ஆட்டோ நிறுத்த அனுமதிக்க வேண்டும் என  கூறி  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து காவல்துறையினர் சூப்பிரண்டு  மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் சென்று மனு அளிக்குமாறு கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *