எங்கள் குணம் மக்களுக்கு தெரியும்…. ராகுல் காந்திக்கு ஆதரவாக பேசிய பொதுச் செயலாளர்….!!!!

எங்கள்  குணம் மக்களுக்கு புரியும் என காங்கிரஸ் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் ராகுல் காந்தி. இவர்  இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை கடந்த செப்டம்பர் மாதம் 7-ஆம்  தேதி கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார். இது தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த யாத்திரை குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறியதாவது. கடந்த காலங்களில் அவரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பாஜக செயல்பட்டு வந்தது.

ஆனால் தற்போது ராகுல் காந்தியின் உண்மை குணம் மக்களுக்கு தெரியும். இந்நிலையில் அவர் படித்தவர், இரக்க குணம் உள்ளவர், முடிவெடுக்க தெரிந்தவர். எனவே நாட்டின் அடுத்த பிரதமர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இந்நிலையில் மக்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. மேலும்  யாத்திரை ராகுல் காந்தியை பிரதமராக மேற்கொள்ளப்படவில்லை. யாத்திரையின் மதிப்பை  யாரும் குறைக்க வேண்டாம் என அவர் கூறியுள்ளார்.