எங்களுக்கு கொஞ்ச தான் சீட் தராங்க… வைகோ கவலை…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு குறைந்த அளவு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வைகோ கவலை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலையானார். அதன்பிறகு பிப்ரவரி 8-ஆம் தேதி தமிழகம் திரும்பினார். அவரின் வருகை அரசியலில் ஏதாவது மாற்றத்தை ஏற்படுத்தும் என அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் தேர்தல் நிதி வழங்கும் நிகழ்ச்சியில் வைகோ கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், குறைந்த அளவே தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. யாரும் கவலைப்பட வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும் என்னுடைய மகன் துரை வையாபுரி தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் அறிவித்துள்ளார். குறைந்தது 10 சீட் கொடுக்க வேண்டும் என்ற கூட்டணி கட்சிகளின் கோரிக்கையை காது கொடுத்து கேட்காத திமுக, ஆளுக்கு 4 அல்லது 5 சீட் தான் தரமுடியும் என்று கரார் காட்டியதாக வெளியான செய்தியை உறுதி செய்யும் வகையில் வைகோ பேச்சு அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *