எங்களுக்கு உதவி பண்ணுங்க…. ஒன்று திரண்ட பொதுமக்கள்…. ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை….!!

அரசின் சார்பில் தொகுப்பு வீடுகள் கட்டி தரக்கோரி பொதுமக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பிள்ளாநல்லூர் ஆர்.கொமாரபாளையம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சிலர் ஒன்று திரண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் கதிரேசனிடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் நாங்கள் கடந்த 25 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருகிறோம்.

எங்களுக்கு சொந்தமாக நிலம், சொத்து எதுவும் இல்லை. எனவே எங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் எங்களுக்கு தொகுப்பு வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் இருந்துள்ளது. மேலும் அவர்களுக்கு ஆதரவாக பாஜக மாவட்ட செயலாளர் லோகேந்திரன்,பட்டியல் அணி மாவட்ட தலைவர் ராம்குமார், பிள்ளாநல்லூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் வடிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.