எங்களுக்கு உடனடியாக சாலை அமைத்து தர வேண்டும்…. பொதுமக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து மயானத்துக்கு  செல்கின்றனர்.  இதுகுறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் விக்கிரவாண்டி சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மயானத்திற்கு செல்ல சாலை அமைத்து தருவதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *