எங்களுக்கு இது இடையூறா இருக்கு..! நீங்கதான் நடவடிக்கை எடுக்கணும்… பொதுமக்களின் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு..!!

பெரம்பலூரில் ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றக்கோரி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்த்தில் நேற்று மங்களமேடு கிராம பொதுமக்கள், வேப்பந்தட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவையூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சூரியபிரகாஷ் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்த பொதுமக்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தில் உள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதி விவசாயிகள் உழவர் சந்தையாகவும், விளையாட்டு மைதானமாகவும், தானியம் களமாகவும் பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் பொதுமக்களுக்கு இடையூறாக இந்த இடத்தின் அருகே தற்போது தனிநபர்கள் 6 பேர் ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். அவர்கள் அங்கு வில்லியம், சிலை, சூலம் ஆகியவற்றை வைத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் இந்த ஆக்கிரமிப்பு இடத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்கவில்லை என்றால் நாங்கள் தேர்தலை புறக்கணிக்க உள்ளோம் என்றனர். இதையடுத்து அவர்களுள் சிலர் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீவெங்கடபிரியாவை நேரில் சந்தித்து இது குறித்து மனு அளித்துள்ளனர்.