இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வீரர்களின் தனிப்பட்ட உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படுவது மிகவும் வேதனையாக இருப்பதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அதாவது ஐபிஎல் போட்டியின் இடையில் மும்பை அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயருடன் ரோகித் சர்மா பேசிக் கொண்டிருந்தார். அதைத் தான் எச்சரித்த பிறகும் வீடியோவாக எடுத்து ஒளிபரப்பியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் அந்த வீடியோவில் மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலக்கப்பட்டதால் அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளதாக பேசியதாக தகவல் வெளியானது. மேலும் வீரர்களின் தனிப்பட்ட உரிமைகளை மீறுவது போன்று இப்படி பதிவு செய்யப்படுவது சரி கிடையாது என தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.