எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் வரும் 28ஆம் தேதி முதல் அதிகரிக்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தென் மாவட்ட மக்களின் தேவைக்கேற்ப கூடுதல் ரயில்களை இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில் தெற்கு ரயில்வே இன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில் கன்னியாகுமரியில் இருந்து தினசரி சென்னை செல்லும் கன்னியாகுமரி அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் நாகர்கோவிலில் இருந்து கோவை செல்லும் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் உள்ளிட்ட ஏழு எக்ஸ்பிரஸ் ரயில்களின் வேகம் வருகின்ற 28ஆம் தேதி முதல் அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . ரயில்கள் அதிகபட்சமாக 15 நிமிடம் வரை முன்னதாக செல்லும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.