ஊழியர்களுக்கு குட் நியூஸ்…. ஊதியத்தை உயர்த்திய பிரபல நிறுவனம்…. அதிரடி அறிவிப்பு….!!!!

உலக அளவில் முன்னணி வகிக்கும் இ காமர்ஸ் தளமான அமேசான் நிறுவனம் இனி வருகின்ற நாட்களில் 1.25 லட்சம் ஊழியர்களை பணியமர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் டெலிவரி ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி அமெரிக்காவில் உள்ள நிறுவனத்தில் வேலை பார்க்கும் டெலிவரி ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக ரூ.1,300 வரை தொடக்க ஊதியத்தை அதிகரித்துள்ளது.

மேலும் 1,25,000 கிடங்கு மற்றும் போக்குவரத்து தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தவும் முடிவு செய்துள்ளது. அமேசான் நிறுவனத்தைப் போலவே வால் மார்ட் நிறுவனமும் தனது டெலிவரி ஊழியர்களுக்கான ஊதியத்தை சமீபத்தில் உயர்த்தியது. இந்த மாதத்தின் தொடக்கத்தில் அமேசான் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட தளவாட வசதிகளை இயக்க புதிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஊதிய உயர்வையும் அறிவித்துள்ளது ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *