ஊழல் இல்லாமல் கட்டுங்கள்…! இல்லையென்றால் தடுப்போம்… பொதுமக்கள் ஆவேசம் ..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஈசூர்  கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவில் குளக்கரை அண்மையில் பெய்த மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் குளத்திற்கு கரை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒப்பந்தத்தில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் குளத்தை10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரினார்கள். காண்ட்ராக்ட் காரர்கள், ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தரையை கட்டியுள்ளார்கள். இதனால் ஒருநாள் மழையில் மொத்தமாக சரிந்துவிட்டது. மீண்டும் 15 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக கூறி வேலையை தொடங்கி உள்ளார்கள். வேலையை செய்தால் முழுமையாக செய்ய வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் நாங்கள் செய்ய விடமாட்டோம் என்று ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.