ஊழலுக்கு எதிரான சட்டம்… இந்தியர்கள் மீதும் பாய்ந்தது… அதிரடி முடிவில் பிரிட்டன் அரசு…!!

பிரிட்டனில் புதிய சட்டமாக பொருளாதார தடை சட்டத்தை ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் மற்றும் இந்தியர்கள் மீதும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டனில் மனித உரிமை மீறல் மற்றும் மற்ற நாடுகளில் நடக்கும் ஊழலுக்கு எதிராக போராடக்கூடிய வகையில் வழங்கப்பட்ட புதிய அதிகாரத்தை முதல் முறையில் நடைமுறைப்படுத்தி உள்ளனர். ஊழலில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரத்தை முதன்முதலில் பிரிட்டன் அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளது.  சட்டத்தின் மூலம் மற்ற நாடுகளில் ஊழல் மற்றும் கடத்தல் போன்ற வழக்குகளில்  குற்றம்சாட்டப்பட்டவர்களின் சொத்துகளை முடக்கி பிரிட்டனுக்கு வருவதற்குரிய பொருளாதார தடையை விதித்துள்ளது.

இதனையடுத்து 230 மில்லியன் டாலர் மோசடியில் ஈடுபட்டுள்ள ரஷ்யா யுனிவர்சல் சேமிப்பு வங்கியின் உரிமையாளரான Dmitry Klyuev உட்பட 14 பேர் மீது பொருளாதார தடையை விதித்துள்ளது. இதுமட்டுமல்லாது தென் ஆப்பிரிக்காவில் நடந்த ஊழலில் சம்மந்தப்பட்டிருக்கும் இந்தியர்களான அஜய், அதுல் மற்றும் ராஜேஷ் குப்தா ஆகிய 3 பேர் மீதும், அமெரிக்க போதை கடத்தலில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கும் பிரிட்டன் அரசு பொருளாதார தடை வித்திட்டுள்ளது.

மேலும் ஊழல் என்பது நாட்டின் வளர்ச்சியை கெடுக்கக்கூடியது என்றும் ஏழை மக்களை ஏமாற்றுவது என்றும் பிரித்தானியா வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் கூறியுள்ளார். ஊழல் என்பது நாட்டை விஷமாக்கக்கூடிய கூடிய செயல் என்றும் பிரிட்டனின் இந்த பொருளாதார தடை சட்டத்தை வரவேற்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் கூறியுள்ளார். இந்த சட்டம் உலகளவில் ஊழலை எதிர்ப்பதற்கான முயற்சி என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *