ஊர் திரும்பும் வடமாநில தொழிலாளர்கள்… தக்க வைக்கும் முயற்சியில் கட்டுமான நிறுவனங்கள்..!!

கொரோனாவிற்கு பயந்து வடமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலத்திற்கு செல்ல தொடங்கியுள்ளனர். இவர்களை தக்க வைக்கும் முயற்சியில் கட்டுமான நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவற்றை கட்டுக்குள் வைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை செயல்படுத்தி வருகின்றது. இருப்பினும் தொற்று அதிகரித்துக் கொண்டே வருவதால் வெளி மாநிலங்களிலிருந்து வந்து வேலை செய்பவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

இதன் காரணமாக அனைவரும் தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதற்கு ஆயத்தமாகி வருகின்றனர். இவர்கள் சொந்த மாநிலத்திற்கு திரும்பிவிட்டால் கட்டுமான தொழில் பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் அவர்களை தங்க வைக்க கட்டுமான நிறுவனங்கள் பெரிதும் முயற்சி செய்து வருகின்றது. அவர்களை தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பணியில் ஈடுபடுத்தி வருவதாக நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *