தமிழ் சினிமாவில் யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற விவாதங்கள் ரசிகர்களிடையே சமீபகாலமாக வெகுவாக சூடுபிடித்துள்ளது. ரசிகர்களும் மாறி மாறி தங்களுடைய கருத்துக்களையும், போஸ்டர்களையும் ஒட்டி வருகின்றனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மட்டுமே என்றும் சூப்பர் ஸ்டார் என்று ரஜினி ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர் இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது.

அதாவது  திண்டுக்கல்லில் ரஜினி ரசிகர்கள் ஒட்டிய  போஸ்டர் ஒன்றில் “உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது. என்றுமே ஒரே சூப்பர் ஸ்டார்தான். அது ரஜினி மட்டும்தான்” என்று குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர் இணையத்தில் செம வைரலாகி வருகிறது.