நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் வனப்பகுதியில் வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இவை உணவு மற்றும் தண்ணீரை தேடி அவ்வபோது குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த கரடி ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஊர்காவல் படை வீரரான கிறிஸ்டோபர் என்பவரை துரத்தியது.
இதனால் தவறி கீழே விழுந்து காயமடைந்த கிறிஸ்டோபர் தற்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரடி நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர். எனவே கரடியை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.