ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள்…. அலறியடித்து ஓடிய கிராம மக்கள்…. விரட்டியடித்த வனத்துறையினர்….!!

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.

தர்மபுரி மாவட்டத்திலுள்ள தாசம்பட்டி, கோடுப்பட்டி, பவளந்தூர் ஆகிய பகுதிகள் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளன. இந்நிலையில் திகிலோடு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வனப்பகுதியிலிருந்து 2 காட்டு யானைகள் சுற்றி திரிந்தன. இந்த யானைகளை கிராம மக்கள் விரட்டினர். இதனையடுத்து இந்த யானைகள் அருகில் உள்ள தாசம்பட்டி, பவளந்தூர் ஆகிய கிராமங்களுக்குள் புகுந்தன.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் அலறியடித்து ஓடினர். இதுகுறித்து கிராம மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த யானைகளை கோடுப்பட்டி வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனையடுத்து மீண்டும் யானைகள் ஊருக்குள் புகுந்து விடாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *