ஊரடங்கு கட்டுப்பாடு மேலும் தீவிரம்…? – முதல்வர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை…!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க பலரும் உதவி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில் தமிழகத்தில் அமலில் உள்ள முழு ஊரடங்கை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என அனைத்துக்கட்சி கூட்டத்தில் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தினர். இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். இதில் டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *